Home News Kollywood லோகேஷ் கனகராஜ் வீட்டிற்கு புதிய வரவு

லோகேஷ் கனகராஜ் வீட்டிற்கு புதிய வரவு

இன்றைய சூழலில் கடந்த ஒரு வருடமாகவே தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற போட்டி தீவிரமாகவே நிலவி வந்தது அதற்கு சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி ஒரு முற்றுப்புள்ளியையும் வைத்து விட்டது.

அதேபோல போட்டி என்று இல்லாவிட்டாலும் இன்றைய காலகட்டத்தின் இயக்குனர் ஷங்கர் என அழைக்கப்படும் அளவிற்கு பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தொடர்ந்து நான்கு வெற்றி படங்களை கொடுத்து ஐந்தாவதாக இன்னொரு வெற்றியை கொடுப்பதற்கும் விஜய் நடிக்கும் லியோ படம் மூலம் தயாராகி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் அவரது வீட்டிற்கு புதிய வரவாக பி எம் டபிள்யூ 7 சீரிஸ் கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த காரின் மதிப்பு சுமார் இரண்டு கோடி என்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் காரை ஸ்டார்ட் பண்ணியதுமே 5.4 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி விடும் என்கிறார்கள் அது மட்டுமல்ல ஸ்மார்ட்போன் வசதியுடன் அன்லாக் செய்யவும் ஸ்டார்ட் பண்ணவும் முடியும் என்கிறார்கள்.