சமீபகாலமாக திரைப்படத்திற்கு இணையாக வெப்சீரிஸ்களின் ஆதிக்கம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் திரைப்படங்களில் தங்களது திறமையை சரியாக வெளிப்படுத்தாத இயக்குனர்கள் கூட வெப் சீரிஸ்களில் ரசிகர்களை அத்தனை எபிசோடுகளையும் தொடர்ந்து பார்க்கும் விதமாக கட்டிப்போட்டு விடுகிறார்கள் என்பது தான்.

அந்த அளவிற்கு ஒரு வெப்சீரிசை பார்க்க ஆரம்பித்தால் மொத்த எபிசோட்களையும் பார்த்து முடிக்கும் அளவிற்கு ஆர்வத்தை தூண்டும் விதமாக உருவாக்கி வருகிறார்கள். இதற்கு முன்னதாக எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான வெலோனி மற்றும் கலையரசன் நடிப்பில் வெளியான செங்களம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இந்த நிலையில் நடிகர் அதர்வா முதன்முறையாக நடித்துள்ள மத்தகம் என்கிற வெப்சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் காட்சியில் இரண்டு எபிசோடுகள் திரையிட்டு காட்டப்பட்டன.

இந்த இரண்டையும் பார்த்தபோது மீதி இருக்கும் எபிசோடுகளையும் உடனடியாக பார்க்கும் ஆவல் அனைவருக்கும் ஏற்பட்டது. அந்த வகையில் இந்த வெப்சீரிஸ் வெளியாகும் போது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பிரசாந்த் முருகேசன் என்பவர் இயக்கியுள்ள இதில் கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார்