V4UMEDIA
HomeNewsKollywood100 மில்லியனை தொட்ட ‘நா ரெடி’ பாடல்

100 மில்லியனை தொட்ட ‘நா ரெடி’ பாடல்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதற்கு முன்பு வெளியான விஜய்யின் மாஸ்டர் படமாகட்டும் அல்லது பீஸ்ட் படமாகட்டும் எல்லாவற்றிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார் அனிருத்.

அந்த வகையில் தற்போது லியோ படத்திலும் அவரது இசையமைப்பில் விஜய் பாடிய நான் ரெடி தான் வரவா என்கிற பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக பட்டி தொட்டி எல்லாம் அந்த பாடல் மிகப்பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குறைந்த நாட்களிலேயே இந்த பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளது. இதற்கு முன்பாக வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் விஜய்க்கு 100 மில்லியன் சாதனை பாடலாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments