நடிகர் விஜய் சேதுபதியை பொருத்தவரை நட்புக்காக பல விஷயங்களை செய்து வருகிறார். அவர் தொடர்ந்து கதாநாயகனாகவே நடிக்கும் வாய்ப்பு பெரிய அளவில் அவர் முன்னால் காத்துக் கிடக்க, அவரோ பல படங்களில் வில்லனாக, பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில், இன்னும் சில படங்களில் வெறும் நட்புக்காகவே வந்து போகும் சிறப்பு தோற்றத்தில் என ஈகோ பார்க்காமல் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல இன்னொரு படி மேலே சென்று தற்போது இன்னொரு ஹீரோவின் படத்தில் பாடலும் பாடியுள்ளார் விஜய்சேதுபதி. ஆம் நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள வுல்ப் என்கிற படத்தில் சிங்கிள் மால்ட் கும்பல் என்கிற பாடலை பாடியுள்ளார் விஜய்சேதுபதி.
பிரபுதேவாவே எழுதியுள்ள இந்த பாடலுக்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். லட்சுமி ராய் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல கன்னட தயாரிப்பாளர் சந்தேஷ் நாகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வினு வெங்கடேஷ் என்பவர் இயக்கி உள்ளார்.