V4UMEDIA
HomeNewsKollywoodநான்கு நாட்களுக்கு ஹவுஸ் ஃபுல் ; நிமிடங்களில் விற்று தீர்ந்த ஜெயிலர் டிக்கெட்

நான்கு நாட்களுக்கு ஹவுஸ் ஃபுல் ; நிமிடங்களில் விற்று தீர்ந்த ஜெயிலர் டிக்கெட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பொதுவாகவே ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் ரசிகர்களுக்கு தாங்களே டிக்கெட் எடுத்துக் கொடுத்து அன்றைய தினம் விடுமுறையாக அறிவிக்கும் நிகழ்வுகளும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே நடந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் புக்கிங் துவங்கிய சில நிமிடங்களிலேயே முதல் நாள் மட்டுமல்ல கிட்டத்தட்ட தொடர்ந்து நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் இதேபோல ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் புக்கிங் நடைபெற்றுள்ளது. சினிமா வரலாற்றிலேயே ஆச்சரியமாக நிகழ்வாக இதை பார்க்க முடிகிறது.

Most Popular

Recent Comments