திரைப்படங்களில் சீரான இடைவெளியில் நடித்துவரும் நடிகர் அதர்வா முதன்முறையாக நடித்துள்ள வெப்சீரிஸ் தான் மத்தகம். பிரசாந்த் முருகேசன் என்பவர் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் வில்லனாக ஜெய் பீம் புகழ் மணிகண்டன் நடித்துள்ளார். கதாநாயகியாக நிகிலா விமல் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இயக்குனர் கௌதம் மேனன், இளவரசு, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். தர்புகா சிவா இந்த வெப் தொடருக்கு இசையமைத்துள்ளார்
இந்த வெப்சீரிஸில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி என ஏழு மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.