V4UMEDIA
HomeNewsKollywoodஜெயிலர் பட இலவச டிக்கெட்டுகளுடன் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனங்கள்

ஜெயிலர் பட இலவச டிக்கெட்டுகளுடன் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்கான ஓபன் புக்கிங்கை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும்போது சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதுடன் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இந்த வருடம் சில தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் ஹச் சாருக்கு மெயில் அனுப்பி சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே தங்களது ஊழியர்களுக்கு ஜெயித்த ரிலீஸ் ஆகும் என்று விடுமுறை அறிவித்துள்ளதுடன் அவர்கள் டிக்கெட்டுக்காக சிரமப்பட வேண்டாம் என்று இலவச டிக்கெட்டுகளையும் வழங்கியுள்ளன.

அதில் ஒரு நிறுவனம் சென்னையில் மட்டுமல்லாமல் பெங்களூரு திருச்சி திருநெல்வேலி செங்கல்பட்டு மாட்டுத்தாவணி ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் என எட்டு கிளைகளுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு இலவச டிக்கெட்களையும் வழங்கியுள்ளது.

இந்த நிறுவனம் மேலும் ரஜினிகாந்த் பற்றி கூறும்போது, “எங்கள் தாத்தாவுக்கும் எங்கள் அப்பாவுக்கும் எங்களுக்கும், எங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்” என்று குறிப்பிட்டுள்ளது.

Most Popular

Recent Comments