கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெய் பீம் மற்றும் கடந்த மாதம் வெளியான குட் நைட் ஆகிய படங்களின் மூலம் கவனிக்கத்தக்க நடிகராக மாறியுள்ளார் மணிகண்டன். குறிப்பாக குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மணிகண்டனுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்துள்ளது.
தற்போது அவரை தேடி பல பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனாலும் தனக்கு குட் நைட் என்கிற வெற்றி படத்தை கொடுத்து திருப்புமுனையை ஏற்படுத்திய தயாரிப்பாளருக்கு தனது அடுத்த படத்தையும் நடித்துக் கொடுக்கிறார் மணிகண்டன்.
இந்தப்படத்திலும் பிரபுராம் வியாஸ் என்கிற ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார். மாடர்ன் லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணா ரவி முக்கியவேடத்தில் நடிக்கிறார்.
இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா,படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன் என வலிமையான கூட்டணி அமைந்துள்ளது.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பை கிளாப் அடித்துத் தொடங்கிவைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்
தற்காலக் காதல் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன குறித்த விவாதத்தை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லக்கூடிய படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.