நடிகர் அருண்விஜய் தற்போது தனது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில், அதே சமயம் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். அவரது படங்கள் எல்லாமே மினிமம் கியாரண்டி வசூலை கொடுப்பதால் பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் அவரை அதிக அளவில் தேடுகின்றனர்.

அதேபோல வித்தியாசமான படைப்புகளுக்கு உற்சாகம் கொடுப்பவர் என்பதால் படைப்பாளிகளும் அவருக்கான கதைகளை உருவாக்கிக் கொண்டு அவரை நோக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தனது ஆஸ்தான இயக்குனரான ஈரம் அறிவழகனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார் அருண்விஜய்.

இன்னொரு பக்கம் இயக்குனர் விஜய் டைரக்சனில் உருவாகியுள்ள மிஷன் சாப்டர் ஒன் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார். இது தவிர இயக்குனர் பாலா டைரக்சனில் வணங்கான் என்கிற படத்திலும் நடித்து வருகிறார் அருண் விஜய்.

இந்த நிலையில் இன்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்த அருண்விஜய். அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.