V4UMEDIA
HomeNewsKollywoodஅயன் பைக்கை தொடர்ந்து ஏவிஎம் மியூசியத்தில் இடம் பெற்ற அஜித்தின் திருப்பதி ரீல்

அயன் பைக்கை தொடர்ந்து ஏவிஎம் மியூசியத்தில் இடம் பெற்ற அஜித்தின் திருப்பதி ரீல்

தமிழ் சினிமாவில் பழம் பெருமை வாய்ந்த, மிகப்பெரிய, அதிக எண்ணிக்கையிலான படங்களை தயாரித்த நிறுவனம் அ௩எவிஎம் புரொடக்சன்ஸ். எம்ஜிஆர், சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த நிறுவனம் தயாரித்த படங்களின் நடித்துள்ளனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் அறிமுகமானது ஏவிஎம் நிறுவனம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா என்கிற படத்தில் தான். அதேசமயம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரை உலக பயணத்தில் முரட்டுக்காளை படத்தில் தொடங்கி சிவாஜி தி பாஸ் படம் வரை அவரை மிக உச்சத்திற்கு கொண்டு சென்றதும் ஏவி எம் நிறுவனத்தின் படங்கள் தான்

இப்படிப்பட்ட பெருமை வாயந்த, கிட்டத்தட்ட நூற்றாண்டு தொடப்போகும் இந்த நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் ஒன்றை ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் நிறுவி உள்ளது

இந்த மியூசியம் ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்களாலும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல பெருமை வாய்ந்த படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் அயன் படத்தில் சூரியா உபயோகித்த டிவிஎஸ் அப்பாச்சி பைக் இடம் பெற்றது.

இந்த நிலையில் ஏ வி எம் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் வெளியான திருப்பதி படத்தின் நெகட்டிவ் கொண்ட ரீல் பாக்ஸ் தற்போது இதில் இடம் பிடித்துள்ளது.

இதுகுறித்த வீடியோ ஒன்றை அருணா குகன் வெளியிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments