V4UMEDIA
HomeNewsKollywoodஆபத்து நிறைந்த ஒன்றே டிராபிக்  ; வெப் படம் குறித்து நட்டி வெளியிட்ட தகவல்

ஆபத்து நிறைந்த ஒன்றே டிராபிக்  ; வெப் படம் குறித்து நட்டி வெளியிட்ட தகவல்

பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் நடிக்கும் படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது அறிமுக இயக்குனர் ஹாரூண் என்பவர் இயக்கத்தில் வெப் என்கிற படத்தில் நடித்துள்ளார் நட்டி.

இந்த படம் வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் இந்த படம் குறித்து நடிகர் நட்டி பேசும் போது, ‘எங்களுக்கு சம்பளத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் வெப் படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர். இயக்குனர் ஹாரூன் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே அவர் வேலை தெரிந்தவர் தான் என்பது தெரிந்து விட்டது. இப்போதைய சூழலில் பல பேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப்” என்று கூறினார்.

Most Popular

Recent Comments