தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலேயே அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம். பாலிவுட்டிலும் இந்த படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி செராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்தப்படத்தில் நடித்துள்ளது.
படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதை தொடர்ந்து இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அனிருத் லைவ்வாகவே படத்தின் பாடல்கள் இசைத்து ரசிகர்களை மகிழ்வித்தார். இதைத் தொடர்ந்து விரைவில் இந்த படத்தின் டிரைலரும் வெளியாகும் என தெரிகிறது.