Home News Kollywood 31 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பாரதிராஜா-இளையராஜா கூட்டணி

31 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பாரதிராஜா-இளையராஜா கூட்டணி

இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா இவர்களின் நட்பு உலகம் அறிந்த ஒன்று. ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இவர்களது கூட்டணி இசையாலும் இயக்கத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டது. அதன்பிறகு 90களில் துவக்கத்தில் இருந்து ஏதோ சில காரணங்களால் பாரதிராஜாவும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றவில்லை.

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரையும் இணைந்து பணியாற்றும் விதமாக இணைத்துள்ளார் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. ஆம் தற்போது மனோஜ் பாரதிராஜா முதல் முறையாக இயக்கி வரும் மார்கழி திங்கள் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பாரதிராஜா முதல் முறையாக இயக்குனராக அறிமுகமான 16 வயதினிலே படத்தில் இசையமைத்ததும் இளையராஜா தான். தற்போது அவரது மகன் இயக்குனராக அறிமுகமாகும் மார்கழி திங்கள் படத்திற்கு இசையமைப்பதும் இளையராஜா தான். எந்த ஒரு ஆச்சரியமான விஷயம்..

இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் சுசீந்திரன் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.