V4UMEDIA
HomeNewsKollywoodசந்திரமுகி-2வுக்கு இசையமைத்தபோது இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஏற்பட்ட திரில்லிங் அனுபவம்

சந்திரமுகி-2வுக்கு இசையமைத்தபோது இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஏற்பட்ட திரில்லிங் அனுபவம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் சந்திரமுகி. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சந்திரமுகி 2 என்கிற பெயரில் இயக்குனர் பி வாசுவே இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் மரகதமணி என்கிற கீரவாணி மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ளார். இந்த படத்தின் பின்னணி இசைப்பணிகளை சமீபத்தில் மேற்கொண்ட கீரவாணி அந்த அனுபவம் குறித்து தற்போது பகிர்ந்துள்ளார்.

அதில்,  ”லைக்கா புரொடக்ஷன்ஸின் ‘சந்திரமுகி 2’ பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கம் இல்லாமல் இரவுகளை கழிக்கின்றனர். அப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட இரண்டு மாதங்கள் தூக்கமில்லாமல் பணியாற்றியிருக்கிறேன். குரு கிரண் மற்றும் என்னுடைய நண்பர் வித்யாசாகர் ஆகியோர் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும்..!” என பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் குரு கிரண் மற்றும் வித்யாசாகர் ஆகியோர் ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்திற்கு முறையே கன்னடம் மற்றும் தமிழ் பதிப்பிற்கு இசையமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருதினை வென்ற பிறகு இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்கும் இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி, லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்தின் பின்னணியிசை குறித்து ட்வீட் செய்திருப்பதால்.. திரை உலகினரிடையே இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Most Popular

Recent Comments