கடந்த சில வருடங்களில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த படங்களை கவனித்துப் பார்த்தால் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவும் இல்லை. அதில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படவும் இல்லை. அதே சமயம் அவர் வில்லனாக மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
அந்த வகையில் பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் ரஜினிகாந்த், விஜய், கமல் என முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தார் விஜய்சேதுபதி. இந்த படங்கள் எல்லாமே அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தன.

அந்த அடிப்படையில் தான் தற்போது பாலிவுட்டில் நுழைந்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பு பற்றி கிடைக்கும் இடங்களில் எல்லாம் படத்தின் நாயகன் ஷாருக்கான் புகழ்ந்து பேசி வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு உலிட்டட்ட தமிழ் நட்சத்திரங்களும் இருக்கின்றனர். இந்தநிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது.

அதில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் பற்றி குறிப்பிடும்போது டீலர் ஆப் டெத் என்கிற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இந்த படத்தில் டெரரான வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பதை இதன் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது.