V4UMEDIA
HomeNewsKollywoodஊர்வசியின் 700 ஆவது படம் அப்பத்தா ; நேரடி ஓடிடி ரிலீஸ்

ஊர்வசியின் 700 ஆவது படம் அப்பத்தா ; நேரடி ஓடிடி ரிலீஸ்

இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம்  தமிழ் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. கிட்டத்தட்ட கடந்த 40 வருடங்களில் கதாநாயகியாக நகைச்சுவை நடிகையாக குணச்சித்திர நடிகையாக என ஏதோ ஒரு பரிமாணத்தில் தமிழ் திரையுலகில் தற்போதும் வெற்றிகரமாக உலா வந்து கொண்டிருக்கிறார் ஊர்வசி.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான சூரரைப்போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களின்  சென்டிமென்ட் நடிப்பால் கண்கலங்கவும் வைத்தார் ஊர்வசி.

இந்த நிலையில் அவரது 700 வது படமாக உருவாகி உள்ளது அப்பத்தா என்கிற திரைப்படம். பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கண்ணம்மா என்கிற கதாபாத்திரத்தில் வயதான பெண்மணியாக நடித்துள்ளார் ஊர்வசி.  இந்த படம் வரும் ஜூலை 29 ஆம் தேதி ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

இந்த படம் குறித்து நடிகை ஊர்வசி கூறும்போது என்னுடைய 700 வது படம் என்பதால் இந்த படம் என்னுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம் என்று சொல்வேன் குடும்ப உறவின் பிணைப்புகளை, பயத்தை எதிர்கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக அழகாக இந்த படம் உருவாகி உள்ளது  என்றார்.

Most Popular

Recent Comments