HomeNewsKollywoodஜெயிலர் இசை வெளியீட்டு விழா ; ரசிகர்களுக்கு இலவச பாஸ் வழங்கிய சன் பிக்சர்ஸ்

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ; ரசிகர்களுக்கு இலவச பாஸ் வழங்கிய சன் பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மோகன்லால், சிவராஜ்குமார் ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளன. அதன் முன்னோட்டமாக இந்த படத்தில் இருந்து ஏற்கனவே காவாலா மற்றும் ஹுக்கும் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில் வரும் ஜூலை 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. பெரும்பாலும் ரஜினி ரசிகர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என நினைப்பது வழக்கம்.

இந்த நிலையில் அப்படி ரசிகர்களுக்கும் ஒரு வாய்ப்பு தரும் விதமாக இன்று  தங்களது இணையதளம் மூலமாக பதிவு செய்த ஆயிரம் ரசிகர்களுக்கு இலவச பாஸ் வழங்கியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இதற்கான பதிவு துவங்கிய 15 நொடிகளிலேயே ஆயிரம் பேருக்கான பதிவு முடிவடைந்து விட்டது. பதிவு செய்தவர்களுக்கு விரைவில் பாஸ் வழங்குவதற்கான இடம் தேதி ஆகியவை குறித்து எஸ் எம் எஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments