தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் தயாரிப்பது சுலபம். ஆனால் அதை சரியானபடி வெளியிடுவது தான் கஷ்டம். நல்ல படத்தை எடுத்து வைத்திருப்பவர்கள் அதை சரியான நிறுவனத்தின் மூலம் ரிலீஸ் செய்யும்போது தான் அதற்கான வெற்றியும் வசூலும் தயாரிப்பாளருக்கு வந்து சேரும். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கையான வெகு சில திரைப்பட வெளியீட்டு நிறுவனங்களின் ஒன்றாக இருப்பது தான் சக்தி பிலிம் ஃபேக்டரி.

இந்த நிறுவனம் வெளியிடும் படங்கள் என்றால் தாராளமாக பார்த்து ரசிக்கலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன். இந்த நிலையில் தற்போது சரத்குமார் அமிதாஸ் பிரதான் இணைந்து நடித்துள்ள தரம் பொருள் என்கிற படத்தின் தமிழக வெளியீடு உரிமையை சக்தி பிலிம் ஃபேக்டரி கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் சி.ஆனந்தராஜ் இயக்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதுகுறித்த தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.