சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது. அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஸ்கின், சுனில் ஆகியோர் வில்லன்களாகவும் யோகிபாபு நகைச்சுவை நடிகராகவும் சரிதா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக முதல் பாகம் கலகலப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது என்கிற விமர்சனம் அனைவரிடமிருந்து கிடைத்தது.
இரண்டாம் பாதி அந்த அளவிற்கு ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் வழக்கம் போல சிவகார்த்திகேயன் படத்திற்கு இருக்கும் வரவேற்பும் வசூலும் இந்த மாவீரன் படத்திற்கும் கிடைத்து அதை ஒரு வெற்றி படமாக மாற்றியுள்ளது.

தற்போது வரை இந்த படம் உலகெங்கிலும் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் ஒரு வெற்றிப் படமாக அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.