விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் மார்க் ஆண்டனி. எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இந்த படம் 70களின் காலகட்டத்தில் நடப்பது போல உருவாகியுள்ளது. இதில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரின் கெட்டப்புகளும் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு தேவைப்படும் முக்கியமான வாய்ஸ் ஓவர் ஒன்றை நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. கார்த்தியும் விஷாலும் கடந்த பல வருடங்களாகவே நடிகர் சங்க விஷயங்களை ஒன்றிணைந்து நட்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் இருவரும் இணைந்து கருப்பு ராஜா வெள்ள ராஜா என்கிற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் அது நடைபெறாமல் போனது. இந்த நிலையில் இப்படியாவது இவர்கள் இருவரும் ஒரு படத்தில் ஒன்று சேர்ந்து உள்ளார்களே என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான்.