யானை படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி அடுத்ததாக இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஷால். இது அவரது 34 வது படமாக உருவாகிறது. இதற்கு முன்னதாக தாமிரபரணி, பூஜை என இரண்டு படங்களில் ஹரியின் டைரக்சனில் நடித்துள்ளார் விஷால்.
முந்தைய இவர்களது கூட்டணியில் உருவான இரண்டு படங்களைப் போலவே இந்த படமும் ஆக்சன் ஜானரில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு இயக்குனர் ஹரி இயக்கிய யானை படத்திலும் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்கிற அறிவிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றனர் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இனிதே துவங்கியது.
படம் குறித்து நடிகர் விஷால் கூறும்போது, “என் திரை வாழ்க்கையில் திருப்புமுனை தந்தவர் இயக்குநர் ஹரி. அவருடன் இணைந்த தாமிரபரணி மற்றும் பூஜை படங்களைப்போல இந்தப்படமும் அழுத்தமான கதை, உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகளுடன், ஆக்சனும் கலந்து அனைவரும் ரசிக்கும் படி இருக்கும். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இப்படம் அமையும்” என்று கூறியுள்ளார்.
என் திரை வாழ்க்கையில் திருப்புமுனை தந்தவர் இயக்குநர் ஹரி. அவருடன் இணைந்த தாமிரபரணி மற்றும் பூஜை படங்களைப்போல இந்தப்படமும் அழுத்தமான கதை, உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகளுடன், ஆக்சனும் கலந்து அனைவரும் ரசிக்கும் படி இருக்கும். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இப்படம் அமையும் என்று கூறியுள்ளார்