சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அடி எடுத்து வைத்தார். அதன்பிறகு வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்து வரும் லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போதைய இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் விஷ்ணு விஷால் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
இன்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதுடன் படப்பிடிப்பு நிறைவு நாளையும் சேர்த்து இரட்டை கொண்டாட்டமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.