விஜய் ஆண்டனி இந்த நடிப்பில் கிட்டத்தட்ட பத்து படங்கள் வரை அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. கடந்த இரண்டு வருடங்கள் வரை அவரது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் கடந்த மாதத்தில் அவர் நடித்த தமிழரசன் மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.
இதில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளியது. இதைத் தொடர்ந்து அவரது அடுத்த படமாக வெளியாக இருக்கும் படம் கொலை. இயக்குனர் பாலாஜி குமார் இந்த படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி உள்ளார்.
கதாநாயகிகளாக ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி நடித்த ஹிட் பாடல் ஆன பார்த்த ஞாபகம் இல்லையோ என்கிற பாடல் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.