HomeNewsKollywoodபோர் தொழில் படம் பற்றி விஷ்ணு விஷால் கூறியது என்ன ?

போர் தொழில் படம் பற்றி விஷ்ணு விஷால் கூறியது என்ன ?

தமிழ் சினிமாவில் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படங்கள் சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. அதில் பெரும்பாலான படங்கள் ஓரளவுக்கு விறுவிறுப்பை தந்தாலும் முழுமையாக ரசிகர்களை திருப்தி படுத்துகிறதா என்றால் அதன் எண்ணிக்கை ரொம்பவே குறைவுதான்.

அந்த வகையில் தற்போது அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடிப்பில் வெளியாகியுள்ள போர் தொழில் திரைப்படம் நீண்ட நாளைக்கு பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதும் ஈடுசெய்யும் படமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தை விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியுள்ளார்

படம் வெளியான நாளிலிருந்து இந்த படத்திற்கான வரவேற்பும் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது. இதற்கு முன்னதாக விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்திற்கு இது போன்ற ஒரு அதிசயம் நடந்தது.

இந்த படம் குறித்து வெளியாக செய்திகளை நடிகர் விஷ்ணு விஷால் கேள்விப்பட்டதும் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் விதமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில், “ராட்சசனை மிஞ்சிவிட்டதா? படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments