லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக இருக்கிறது என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே கைதி, மாஸ்டர், விக்ரம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர் வெற்றிகளை கொடுத்து வருவதாலும் தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து இருப்பதாலும் இந்த படத்திற்காக எதிர்பார்ப்பு தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தை வெளிநாட்டில் வெளியிடும் உரிமையை பிரபல வட இந்திய நிறுவனமாக பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அதேபோல இந்த படத்தின் கேரள வெளியிட்டு உரிமையையும் மலையாள திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக கோகுலம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது