HomeNewsKollywood‘பாயும் ஒளி நீ எனக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘பாயும் ஒளி நீ எனக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2021ல் வெளியான டாணாக்காரன் திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாகவும் விமர்சன ரீதியாக வரவேற்பு கொடுத்த படமாகவும் அமைந்தது. அதுமட்டுமல்ல வரலாற்று நாவலை தழுவி எடுக்கப்பட்ட, ஜாம்பவான் இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் உருவான, பொன்னியின் செல்வன் படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது தவிர பாயும் ஒளி நீ எனக்கு மற்றும் ரெய்டு ஆகிய படங்களில் நடித்து வந்தார் விக்ரம் பிரபு. இந்த படத்தின் மூலம் கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அது மட்டுமல்ல தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுசுக்காக இந்த படத்தை அவர் தயாரித்தும் உள்ளார்.

கன்னட திரைதுறையின் மிகவும் பிரபலமான நடிகர் டாலி தனஞ்சயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவரது அதிரடி காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன . வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் திரையரங்கு உரிமை மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளையும் எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தற்போது கைப்பற்றி உள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments