நடிகர் அமீர் ராம், பருத்திவீரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். இப்போது நடிகராகவும் மாறி சில படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை கிழக்கு கிழக்கு சாலையில் உத்தண்டி அருகில் 4 ஏஎம் என்கிற பெயரில் உணவகம் ஒன்றை திறந்துள்ளார் அமீர்

நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன், உள்ளிட்டோர் இந்த உணவகத்தை திறந்து வைத்தனர். அமீருக்கு திரை உலகில் இருந்து பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுந்தரபாண்டியன் புகழ் இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் அமீரின் இந்த உணவகத்திற்கு நேரில் வருகை தந்து, தனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துள்ளார்.