இயக்குனர் சமுத்திரக்கனி மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விமானம். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை மீரா ஜாஸ்மின் இந்த படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகிறார்.

தாழ்த்தப்பட்ட இடத்தில் வசிக்கும் அப்பாவும், மகனும். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைக்கு விமானம் ஏற வேண்டும் என்ற ஆசை. தந்தை வறுமையில் வாடினாலும் மகனின் ஆசையை நிறைவேற்ற இரவு பகலாக உழைக்கிறார். விமானம் ஏற விரும்பும் மகனின் ஆசை நிறைவேற என்ன செய்ய வேண்டும்? என்று எப்போதும் நினைப்பார்.

அப்பாவுக்கும், மகனுக்கும் இடையிலான இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஒரு மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் ஷிவ் பிரசாத் யானாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனுசுயா பரத்வாஜ் என்பவர் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படம் வரும் ஜூன் ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரை நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.