சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா புகழ் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாவீரன். அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படம் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி விட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயனும் முடித்துவிட்டார். அதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு டப்பிங் பேசத் தொடங்கி அந்தப் பணியையும் நிறைவு செய்து விட்டார் சிவகார்த்திகேயன்.

படத்தில் சிவகார்த்திகேயன் காட்சிகள் தவிர இன்னும் எடுக்கப்பட வேண்டிய சில காட்சிகளுக்காக கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து விட்டது படக்குழுவினர் இதனை கேக் வெட்டி வைத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

முதலில் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட இந்த படம் ஜெயிலர் படமும் அதே தேதியில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.