பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் அரசியல் கதாபாத்திரங்களில் நடிப்பது போல ஹீரோயின்கள் நடிப்பது ரொம்பவே குறைவு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடித்த கொடி படத்தில் திரிஷா அரசியல்வாதி கதாபாத்திற்கு அதுவும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு கம்யூனிஸ்ட் ஆக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். உதயநிதி கதாநாயகனாகவும் பஹத் பாசில் வில்லனாகவும் நடிகர் வடிவேலு முக்கிய குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசும்போது, தான் இந்த படத்தில் கம்யூனிஸ்ட்டாக நடித்துல்லாதாக தனது கதாபாத்திரம் குறித்து வெளியிட்டார்.

அதுமட்டுமல்ல கடைப்பிடிப்பு தளத்தில் சிரித்து பேசிக்கொண்டே ஜாலியாக இருந்தோம். ஆனால் படம் அது மாதிரி ஜாலியாக இருக்காது. கொஞ்சம் சீரியசான படமாகவே இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் கீர்த்தி சுரேஷை பாராட்டி பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறும்போது கீர்த்தி சுரேஷுக்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களை பார்க்கும்போது அது உறுதியாகவே தெரிகிறது என்று பாராட்டினார்.