இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி முதன்முறையாக இயக்குனராக அறிமுகம் ஆகி இயக்கி வரும் படம் மார்கழி திங்கள். இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரித்து வருகிறார். இயக்குனர் பாரதிராஜா மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்று நடிக்க, ஷ்யாம் செல்வன், ரக்ஷனா அறிமுக ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தேனியில் துவங்கி தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு சமயத்தில் திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்னல் தாக்குதலால் படப்பிடிப்பு கருவிகள் சேதம் அடைந்தன.

அதிர்ஷ்டவசமாக படக்குழுவினர் யாருக்கும் எந்த விதமான காயமும் பாதிப்பும் ஏற்படவில்லை என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.