HomeNewsKollywoodகோவையை திணறடித்த ஜி.வி பிரகாஷ் லைவ் கான்சரட்

கோவையை திணறடித்த ஜி.வி பிரகாஷ் லைவ் கான்சரட்

முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா முதல் இளம் இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் உள்ளிட்ட பலரும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவ்வப்போது இன்னிசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான் ஜிவி பிரகாஷ் நேற்று கோவையில் லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் அரங்கமே நிறைந்து ஆர்ப்பரித்த கூட்டத்தினர் மத்தியில் வெற்றிகரமாக அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட ஜிவி பிரகாஷ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “இந்த நிகழ்ச்சிக்கான அத்தனை டிக்கெட்டுகளும் விற்று அரங்கு நிறைந்தது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். என்னுடைய இந்த ஆயிரத்தில் ஒருவன் என்கிற இந்த முதல் லைவ் நிகழ்ச்சியை பிளாக்பஸ்டர் ஆக்கியதற்கு நன்றி. என்னுடைய மனமார்ந்த மகிழ்ச்சி. லவ் யூ கோவை’ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் இந்த லைவ் கான்சர்ட் நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்ததை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அவரது தாய் மாமாவான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments