HomeNewsKollywoodமாமன்னன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் வெளியானது

மாமன்னன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் வெளியானது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாராகியுள்ள படம் மாமன்னன். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் பஹத் பாஸில் வில்லனாகவும் நடித்துள்ள இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நகைச்சுவை கலந்த குணசித்திர கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இன்னொரு பக்கம் இந்த படத்தில் இருந்து ஒவ்வொரு லிரிக் பாடல் வீடியோவாக வெளியாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் நடிகர் வடிவேலு பாடிய ராசா கண்ணு என்கிற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்போது வரை கிட்டத்தட்ட ஆறு மில்லியன் பேர் இந்த பாடலை ரசித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏ.ஆர் ரகுமான் பாடியுள்ள ஜிகு ஜிகு ரயில் என்கிற பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானே பாடி இருக்கிறார் என்பதால் இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments