HomeNewsKollywoodகலைப்புலி தாணுவின் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் கிச்சா சுதீப்

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் கிச்சா சுதீப்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி தாணு.  தனது படங்களைப் போன்று தனது பட வெளியீட்டிலும் விளம்பரங்களிலும் பிரமாண்டம் காட்ட கூடியவர்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் படங்களை தயாரித்து வரும் கலைப்புலி தாணு கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்கிற படத்தை தயாரித்தார்.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக பிரபல நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் மற்றும் பான் இந்திய படமாக இது உருவாகும் என தெரிகிறது.

ராஜமவுலி இயக்கிய நான் ஈ என்கிற படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே நெருக்கமானவர் நடிகர் கிச்சா சுதீப். அதைத்தொடர்ந்து அவரது படங்கள் கன்னடத்தில் உருவானாலும் அவை தமிழில் வெளியாகி வந்தன.

குறிப்பாக கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன பிடி என்கிற படத்திலும் நடித்திருந்தார் கிச்சா சுதீப். தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் இவர் நடிக்கும் படத்தை யார் இயக்கப் போகிறார், மற்ற நட்சத்திரங்கள் குறித்த விபரம் எல்லாம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments