பொதுவாகவே நடிகர்களை பொறுத்தவரை அவர்களுக்கு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதும் டபுள் ஆக்சன் கதாபாத்திரத்தில் நடிப்பதும் மிகவும் விருப்பமான ஒன்று. ஒவ்வொரு ஹீரோவின் ரசிகர்களுக்கும் அவை கூடுதலான உற்சாகத்தை தரும்.
அந்த வகையில் நடிகர் சிம்பு அடுத்ததாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தான் நடிக்க உள்ள படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முன்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சிம்புவும் இந்த படத்திற்காக தனது உடல் எடையில் சில மாற்றங்களை செய்துள்ளார். அது இந்த இரு வேடங்களில் ஒன்றுக்காகத்தான் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னதாக சிம்பு தான் இயக்கி நடித்த மன்மதன் படத்திலும் அதன் பிறகு 2007ல் வெளியான சிலம்பாட்டம் என்கிற படத்திலும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். 15 வருடங்கள் கழித்து மீண்டும் இதே போன்று இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.