V4UMEDIA
HomeNewsKollywoodசூரியின் கொட்டுக்காளி படப்பிடிப்பு நிறைவு

சூரியின் கொட்டுக்காளி படப்பிடிப்பு நிறைவு

கடந்த 15 வருடங்களாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் மூலம் கதாநாயகனாகவும் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். இந்த படத்தில் மிகசிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து இந்த படம் வெளி வருவதற்கு முன்பே இவரை கதையின் நாயகனாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் கொட்டுக்காளி. சூரியின் நீண்ட நாள் நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மலையாள திரையுலகில் இளம் நடிகையான அன்னா பென் என்பவர் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில் தற்போது இதன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவலை பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளியாகி பல விருதுகளை வென்று வரவேற்பு பெற்ற கூழாங்கல் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான கொட்டுக்காளி படத்தின் டைட்டில் டீசரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் விடுதலை படம் போல இந்த படமும் சூரிக்கு கதாநாயகனாக இன்னும் பெயர் பெற்று தரும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular

Recent Comments