V4UMEDIA
HomeNewsKollywoodமே-26லாவது ரிலீஸ் ஆகுமா காசேதான் கடவுளடா ?

மே-26லாவது ரிலீஸ் ஆகுமா காசேதான் கடவுளடா ?

குறைந்த பட்ஜெட்டில் அதுவும் திட்டமிட்ட நாட்களில் படப்பிடிப்பை நடத்தி தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் கொடுக்காத இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஆர் கண்ணன். அதுமட்டுமல்ல மினிமம் கேரண்டி வெற்றிக்கு உத்தரவாதம் தரக்கூடியவர்.

ஆனால் அப்படிப்பட்ட இயக்குனரின் படங்கள் கடந்த சில வருடங்களாகவே ரிலீஸ் ஆவதில் கடும் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் அவர் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் கூட எடுத்து முடிக்கப்பட்டு பல மாதங்கள் கழித்து வெளியான.

அதற்கு முன்பே துவங்கப்பட்ட படம் தான் ஆர் கண்ணன் இயக்கிய காசேதான் கடவுளடா. இந்த படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்க கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.. முக்கிய வேடங்களில் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படமும் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது கூட படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா இயக்குனர் கண்ணனிடம் நீங்கள் திறமையான இயக்குனர் ஆனால் இனிமேல் நீங்கள் படம் தயாரித்து சிக்கலை இழுத்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கும் அளவிற்கு ஒரு தயாரிப்பாளராக மிகப்பெரிய அளவில் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார் ஆர் கண்ணன்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு மே 26 இல் வெளியாகும் என தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த முறையாவது அறிவிக்கப்பட்ட இந்த தேதியில் இந்த படம் எந்த தடங்கலும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்பதும் இயக்குனர் ஆர்.கண்ணனுக்கு இது வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதுமே நம்முடைய விருப்பம்.

Most Popular

Recent Comments