மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மீண்டும் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர கௌதம் மேனன். மிஸ்கின். பிரியா ஆனந்த். பாபு ஆண்டனி. மேத்யூ தாமஸ். அபிராமி வெங்கடாசலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இருக்கிறது.

வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்த படம் லோகேஷ் கனகராஜின் எல் சி யு பாணியில் எடுக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியானது. அதனால் இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் அந்த தகவலை விஜய்சேதுபதி மறுத்துள்ளார்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் டைரக்சனில் மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களில் விஜய்சேதுபதி நடித்ததால் இந்த படத்திலும் அவரது பங்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை என்றாலும் வேறு விதமாக இந்த படத்தில் தனது பங்களிப்பை தருகிறார்.
ஆம்.. இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்திற்கு தமிழில் டப்பிங் குரல் கொடுக்கிறார் விஜய்சேதுபதி என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.