இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா என்கிற வெற்றி பட மூலம் இயக்குனராக அறிமுகமானாலும் அவருக்கு மிகப்பெரிய கமர்சியல் இயக்குனர் என்கிற அந்தஸ்தையும் கூடவே அதில் நடித்த நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்த படம் ஜிகர்தண்டா.
அந்த படத்திற்கு பிறகு முன்னணி இயக்குனர்கள் வரிசைக்கு உயர்ந்த கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து ரஜினிகாந்த்தின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம், விக்ரம் நடித்த மகான் என முன்னணி நடிகர்களின் படங்களாக இயக்கி வருகிறார். இந்தநிலையில் கடந்த வருடம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற பெயரில் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் துவங்கியது.
இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இது குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக தற்போது போஸ்டருடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆக்சன் கலந்த டார்க் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.