
சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்கிற படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது விஷால் கதாநாயகனாக நடித்து வரும் மார்க் ஆண்டனி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் வில்லனாக நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் செல்வராகவனும் தெலுங்கு நகைச்சுவை நடிகராக சுனிலும் நடித்துள்ளனர். கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்க இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது விஷாலும் சுனிலும் இந்த படத்தின் தங்களது காட்சிகளை நிறைவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து படக்குழுவினருடன் கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியை கொண்டாடி உள்ளனர்.

இந்தப்படம் வரும் ஜூன் 28ல் வெளியாகும் என்கிற அறிவிப்பையும் கூடவே வெளியிட்டுள்ளனர். இஹனை தொடர்ந்து விரைவில் இந்த படத்தின் மீதி படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.