ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள பர்ஹானா திரைப்படம் மே 12ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் பர்ஹானா என்கிற இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பொதுவாகவே இஸ்லாமிய சமந்தப்பட்ட படங்கள் வரும்போது அது குறித்து ஒரு பரபரப்பும் சலசலப்பும் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த படம் குறித்தும் சில செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்துள்ள பிரபல நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இதுகுறித்து ஒரு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறும்போது எங்களது தயாரிப்பு நிறுவனம் எப்பொழுதுமே சமூகப்பொறுப்புடன் கூடிய படங்களை தயாரித்து வருகிறது. இதற்கு முன்னதாக எங்கள் தயாரிப்பில் வெளியான அருவி, ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி உள்ளிட்ட படங்கள் அனைத்துமே அப்படி எடுக்கப்பட்டவை தான்.

இந்த பர்ஹானா திரைப்படம் அனைத்து ரசிகர்களுக்குமான ஒரு படம். இதில் எந்த ஒரு மதத்தை பற்றியும் புண்படுத்தும் விதமாக எந்த ஒரு காட்சியும் இல்லை. இந்த படம் மனித நேயம் உள்ளிட்ட விஷயங்களை மையப்படுத்தி மட்டுமே உருவாகியுள்ளது. பர்ஹானா’ இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்” என்று கூறியுள்ளனர்.















