கடந்த மார்ச் மாத இறுதியில் சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த பத்து தல படம் வெளியானது. இந்த படத்தை ஓப்லி கிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்தார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஃப்டி என்கிற படத்தின் ரீமேக்காக இந்த படம் வெளியானாலும் ரிலீஸுக்கு முன் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறியது.

இந்த நிலையில் ஒபிலி கிருஷ்ணா தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ராமன் தேடிய சீதை, சாருலதா உள்ளிட்ட படங்களை தயாரித்த குளோபல் மீடியா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ஓபிலி கிருஷ்ணா இயக்குகிறார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஓபிலி கிருஷ்ணாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பத்து தல படத்திற்கு மட்டுமல்ல, கிருஷ்ணா ஏற்கனவே இயக்கிய சில்லுனு ஒரு காதல் படத்திற்கும் ஏ.ஆர் ரகுமான் தான் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.