தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என சொன்னால் நடிகர் சிவகுமாரை சொல்வார்கள். அதேபோல நடிகைகளில் மார்க்கண்டேயினி என்று சொன்னால் நடிகை திரிஷாவை தாராளமாக சொல்லலாம். கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் அவர் எப்படி சினிமாவில் அறிமுகமானாரோ அதேபோன்று தற்போது இளமை மாறாமல், தோற்றம் மாறாமல் ஒரே போல காணப்படுகிறார்.
20 வருடங்கள் கடந்த பின்னும் இப்போதும் கூட கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார் திரிஷா. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் தனது முத்திரையை பதித்திருந்தார் திரிஷா.
அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் லியோ பட குழுவினர் திரிஷாவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.