HomeNewsKollywoodஜெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரும் அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இணைந்து பணியாற்றி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் துவங்க இருக்கின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

தற்போது ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் விதமாக இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவுப்புடன் சேர்த்து ஒரு புரோமோவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது

இந்த புரோமோவில் படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்களான மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, நாகபாபு, விநாயகன் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments