HomeNewsKollywoodமுதன்முறையாக இணைந்த சிவகார்த்திகேயன் ஜிவி பிரகாஷ் கூட்டணி

முதன்முறையாக இணைந்த சிவகார்த்திகேயன் ஜிவி பிரகாஷ் கூட்டணி

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க துவங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை அவரது படங்களுக்கு பெரும்பாலும் அனிருத் மற்றும் இமான் ஆகியோர்தான் அடிக்கடி இசையமைத்து வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக கிராமத்து படங்களுக்கு இமான் என்றும் நகரத்துப் படங்களுக்கு அனிருத் என்றும் சிவகார்த்திகேயனே தனது இசை கூட்டணியை இரண்டாக பிரித்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு தான் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக நடிகை சாய் பல்லவி இணைந்து கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments