தமிழில் ரன், சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு பெற்ற நடிகையாக வலம் வந்தார் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக மகள் என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் குயின் எலிசபத் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். இந்த படத்தில் கதாநாயகனாக நரேன் நடிக்கிறார்.

மலையாளத்தில் மம்முட்டி நடித்த மாமாங்கம், மிகப்பெரிய ஹிட்டான ஜோசப் மற்றும் அதன் தமிழ் ரீமேக்கான விசித்திரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம் பத்மகுமார் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது கிட்டத்தட்ட 25 நாட்களிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக நரேன், மீரா ஜாஸ்மின் இருவரும் இதற்கு முன்னதாக அச்சுவின்டே அம்மா, ஒரே கடல், மின்னாமினி கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.