V4UMEDIA
HomeNewsKollywoodசாந்தனுவுக்கு ஒரு சுப்பிரமணியபுரம் ஆக மாறுமா இராவணக்கோட்டம் ?

சாந்தனுவுக்கு ஒரு சுப்பிரமணியபுரம் ஆக மாறுமா இராவணக்கோட்டம் ?

தங்களது பெற்றோருக்கு உள்ள செல்வாக்கை அடிப்படையாக வைத்து வாரிசு நட்சத்திரங்கள் சினிமாவில் களம் இறங்குவதும் களம் இறக்கப்படுவதும் வாடிக்கை தான். தங்களது பெற்றோர்கள் ஏற்கனவே சாதித்த பிரபலங்களாக இருப்பது என்பது வாரிசுகளுக்கான ஒரு எளிதான நுழைவு சீட்டு மட்டுமே.. ஆனால் திறமை இருந்தால் மட்டுமே அவர்களால் அந்த வாய்ப்பை தக்க வைத்து நீண்ட காலம் திரையில் பயணிக்க முடியும்.

அப்படியும் சில நீண்ட காலம் பயணித்தாலும் கூட தங்களுக்கென சொல்லிக்கொள்ளும்படியான ஒரு அடையாளத்தை சாதிக்க முடியாத ஒரு இக்கட்டான சூழலிலும் சில பேர் இருப்பார்கள். ஆனால் சாதிக்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். இடைவிடாமல் போராடிக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு நபர்தான் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜின்  மகன் சாந்தனு. இவருக்கு அறிமுகப்படமே கலைப்புலி தாணு தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான படமாக அமர்க்களமான ஆரம்பமாக அமைந்தது.

ஆனால் படம் பெரிய அளவில் கை கொடுக்காததாலும் அதற்கடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் சாக்லேட் பாயாகவே நடித்து வந்ததாலும் தற்போது வரை தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சசிகுமார் இயக்கி நடித்து அறிமுகமான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் நடிகர் ஜெய்யின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சாந்தனுவை தான் சசிகுமார் அணுகி உள்ளார்.

ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் சாந்தனு நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் அந்தப்படத்திற்கு கிடைத்த வெற்றியும் அதன் பிறகு ஜெய்க்கு திரை உலகத்தின் ஏற்பட்ட ஏற்றமும் ஊரறிந்த விஷயம்.

இந்த நிலையில் தான் தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ராவணக்கோட்டம் என்கிற படத்தில் ஒரு கிராமத்து இளைஞனாக அதிரடி ஆக்சன் அவதாரம் காட்டி நடித்திருக்கிறார் சாந்தனு. ஏற்கனவே மதயானை கூட்டம் என்கிற படத்தை இயக்கி அதன் மூலம் நடிகராக கதிரை அறிமுகப்படுத்தி இன்று ஒரு பெரிய அளவிற்கு அவரை உருவாக்கியதில் இயக்குனர் விக்ரம் சுகுமாறனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

அந்த விக்ரம் சுகுமாரன் தான் இந்த ராவணக் கூட்டம் படத்தை இயக்கியுள்ளார் என்பதால் நிச்சயமாக சுப்பிரமணியபுரம் படத்தில் தவறவிட்ட வாய்ப்பை இந்த ராவணக் கூட்டத்தின் மூலமாக சாந்தனு சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்றும் படமும் அதற்கு ஏற்றபடி வரவேற்பு பெறும் என்றும் நம்பலாம்.

Most Popular

Recent Comments