V4UMEDIA
HomeNewsKollywoodமே 12-ல் வெளியாகும் பர்ஹானா

மே 12-ல் வெளியாகும் பர்ஹானா

என் வழி தனி வழி என்பது போல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோக்களுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடுவதை விட்டுவிட்டு தொடர்ந்து கதையின் நாயகி ஆகவே பல படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் அப்படி அவர் நடித்த ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.

குறிப்பாக கடந்த வருட இறுதியில் இருந்து வெளியான டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், சமீபத்தில் வெளியான சொப்பன சுந்தரி உள்ளிட்ட படங்கள் அவர் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் பர்ஹானா.

இந்த படம் நிச்சயமாக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு எதிர்பார்த்த வெற்றியை தரும் என தகுதியாக நம்பலாம். காரணம் நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஒரு நாள் கூத்து என்கிற அற்புதமான படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அது மட்டுமல்ல இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே வெங்கட் பிரபுவின் கஸ்டடி, சாந்தனுவின் ராவணக்கோட்டம் ஆகிய படங்கள் இதே தேதியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த பர்ஹானா திரைப்படம் தனக்கான வெற்றியை தேடிக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular

Recent Comments