வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் போக்கு சமீப காலமாகவே அதிகரித்துள்ளது. அது பெரிய படமானாலும் சரி, சிறிய படம் ஆனாலும் சரி.. அந்த வகையில் கடந்த 2013ல் விஜய்சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சூது கவ்வும்,

இந்த படம் விஜய்சேதுபதியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழிந்த நிலையில் இந்தப் படத்திற்கு தற்போது இரண்டாம் பாகம் தயாராகிறது.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக நடிகர் மிர்ச்சி சிவா இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். எஸ்ஜே அர்ஜுன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

சூது கவ்வும் படத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்பிரைசஸ் சார்பாக தயாரிப்பாளர் சி வி குமாரே இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் துவக்க விழா பூஜைடன் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த கருணாகரனும் இந்த இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்