கலகலப்பான படங்களுக்கு பெயர் போன இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்று விட்டார். அங்கே இளம் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் கஸ்டடி என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார் வெங்கட் பிரபு.
வரும் மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதற்காக ரிலீஸ் மற்றும் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறது கஸ்டடி படக்குழு. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, முக்கிய வேடங்களில் சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக சென்னை வந்துள்ள நடிகர் நாகசைதன்யாவை வெங்கட் பிரபுவின் பேவரைட் கூட்டணியான சென்னை 28 பட நடிகர்கள் சேர்ந்து சந்தித்துள்ளனர்.
அவர்களும் தங்கள் பங்கிற்கு வெங்கட் பிரபுவின் இந்த படத்தை புரமோட் பண்ணும் வேலையில் இறங்கி உள்ளனர்.